உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்களுடன் – 22 பேர் கைது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்களையும், பொலிஸாருடன் இணைந்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட இருநூற்று பத்து (210) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஐந்து (05) டிங்கிகள் மற்றும் ஒரு (01) சந்தேக நபரையும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையால் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னார் காகரத்தீவு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சுழியோடி நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) சந்தேக நபர்கள், ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் ஆறு (06) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், கிழக்கு கடற்படை கட்டளையால், கந்தளாய் பொலிஸாருடன் இணைந்து கந்தளாய் பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட இருநூற்று பத்து (210) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (01) சந்தேக நபரொருவர் 2025 ஜூலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் டிங்கிப் படகுகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, கோட்பே, மன்னார் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களிடமும், குச்சவெளி மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களிடமும் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related News

Total Websites Views

Total Views: 313040

Search

விளம்பரங்கள்