உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

தலைமை கொடுக்க காத்திருக்கும் காத்த நகர்” : ஹக்கீமின் தலைமைக்கு ஆபத்து – உயர்பீட உறுப்பினர் அமீர்.!!!

ஏ.எல்.எம்.நிப்ராஸ்கான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம் தோல்வியடைந்து மாற்றுத்தலைமைத்துவம் பரவலாக வேண்டப்பட்டு வரும் நிலையில் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தேசிய ரீதியாக பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அக்கட்சியின் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற பாரிய பங்களிப்பை வழங்கினார் என்ற விடயமும், கிழக்கு தலைமைத்துவமும் பரவலாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஆர்.அமீர் “தலைமை கொடுக்க காத்திருக்கும் காத்த நகரும் ..தலைமையை இழந்து நிற்கும் கல்முனையும் .. விசித்திரம்” என்ற தொடர் பதிவொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் காத்தான்குடிக்கு (கிழக்குக்கு) வரப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மு.கா தலைமைத்துவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களே தகுதியானவர் என்ற கதையாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் உயர்பீட உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அவர்களின் “”தலைமை கொடுக்க காத்திருக்கும் காத்த நகர்” என்ற பதிவானது கட்சிக்குள் மு.கா தலைவர் ஹக்கீம் மீதான அதிருப்தி அதிகரித்திருப்பதையும், மாற்றுதலைமையாக கிழக்கை சேர்ந்த கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோசம் எழுந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது.

அம்பாறையில் பலத்த தோல்வியை சந்தித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது இருப்பை தக்கவைக்க தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, புதிய தலைமுறை கழகத்தலைவர் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோரிடம் உதவிக்காக கையேந்தி நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700497

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time