மட்டக்களப்பில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி.!!!
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று (01) காலை முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், மேலதிக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

