உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு – ஒரு இலட்சம் ரூபா அபராதம்.!!!

(அஸ்லம்)

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக அதன் உரிமையாளருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வர்த்தக நிலையத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த வர்த்தகர் மீது நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சாலிந்த நவரத்தனவினால் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் முன்னிலையில் குறித்த வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700173

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time