உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

25 அரைப் பவுண் தங்க நகைகளுடன் – 33 வயது இளைஞன் கைது.!!!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 310626

Search

விளம்பரங்கள்