உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

இரு பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர்; பெருமளவு ஐஸ் போதைப்பொருளுடன் – காத்தான்குடி பொலிஸாரால் கைது.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பகுதிகளில் நேற்றிரவு (29) பொலிசார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர் பெருமளவு ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .

காத்தான்குடி பரீனாஸ் வீதியில் 2350 மில்லி கிராம் போதை பொருளுடன் ஒரு ஐஸ் வியாபாரியும் காங்கேயனோடை ஈரான் சிட்டி பகுதியிலிருந்து 2,300 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் மற்றொரு ஐஸ் வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வேளை காங்கேயனோடை ஈரான் சிட்டி பகுதியிலிருந்து 1085 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின்கீழ் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 235885

Search

விளம்பரங்கள்