இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: சாரதி உயிரிழப்பு.!!!
வாத்துவ மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இன்று (24) இடம்பெற்ற கோர விபத்தில், இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்திருந்த இரு பேருந்து சாரதிகளும் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதில் ஒருவரின் உயிர் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பேருந்துகளில் ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.