உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

UEFA நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில்; ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது – போர்த்துக்கல் அணி.!!!

UEFA நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்த்துக்கல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2ஆவது முறையாக பட்டம் வென்றுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதை தகர்த்து காட்டியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி.

ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார் அந்த அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி. இது சர்வதேச அளவில் அவரது 2ஆவது கோல். இருப்பினும் அதற்கான பதில் கோலை 5 நிமிடங்களில் வலைக்குள் தள்ளியது போர்ச்சுகல். நுனோ மென்டிஸ் 26ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்காக கோல் பதிவு செய்தார்.

பின்னர் 45ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒயர்சபல், ஸ்பெயின் அணிக்காக 2ஆவது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ கோல் பதிவு செய்தார். இது சர்வதேச அளவில் அவரது 138ஆவது கோல். இதன் மூலம் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை எந்த அணியாலும் பதிவு செய்ய முடியவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் கோல் பதிவு செய்தது. போர்ச்சுகல். மறுபக்கம் ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்ய நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது போர்த்துக்கல்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700445

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time