1,600 அரச ஊழியர்கள் பணி நீக்கம்.!!!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டொரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். அதில், முக்கியத்துவம் வாய்ந்தது அரசுத் துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 08 மாத ஊதியத்துடன் கட்டாய ராஜினாமா செய்து கொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பளித்திருந்தது. கடந்த மாதம் வெளியிட்டிருந்த உத்தரவில், பெப்ரவரி 06 ஆம் திகதிக்குள் பணியில் இருந்து இராஜினாமா செய்து கொண்டால் 08 மாத ஊதியம் வழங்கப்படுமென்று றிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (USAID) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்பினுடைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500 க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் அனுப்பி குறித்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக உள்ள சில ஊழியர்களை தவிர்த்து அனைவரையும் பதவி விலக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் அரசானது செலவினங்களை குறைத்து, அரசின் செயற்திறனை மேம்படுத்த DOGI எனும் துறையை உருவாக்கியுள்ளார். இத்துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Join Now Whatsapp Group Link :
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5