உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மரத்தில் மோதி வேன் விபத்து – ஒருவர் பலி, ஐவர் வைத்தியசாலையில்.!!!

தனமல்வில – வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், இறந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கவலைக்கிடமாக இருந்த 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700217

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time