உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் – தப்பியோடிய நபரை கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை கோரியது.!!!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று (26) அதிகாலையில் கைவிடப்பட்டிருந்த வீடு ஒன்றை சோதனையிட்டனர்.

இச் சோதனை நடவடிக்கையின் போது பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கு இருந்த சிலர் பொலிஸாருடன் மோதியதில், ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று, ரூபா 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள், மேலும் அவற்றை பயன்படுத்தும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்ற நபர் சண்டையிட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர். வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சைக் குத்தியுள்ளார்.

இந்த நபர் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்க்காணும் எண்களுக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்:

📞 பொலிஸ் மா அதிபருக்கு (WhatsApp): 071 859 8888
📞 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு: 011 233 7162 / 071 859 2087

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700163

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time