உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

யாருக்குத்தான் ஆசையில்லை; தலைவராய் மாற.!!!

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் பிதா மகனாக பார்க்கப்படுகின்ற ஒருவர்தான், அஸ்ரப் எனும் பல்துறை ஆளுமை. அவர் விபத்தில் பலியாகி இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது நினைவேந்தல்கள் கிழக்கின் நாலா புறங்களிலும் நடந்தேறினாலும், அவரது சிந்தனையில் முளைத்த ஒற்றுமை எனும் கயிறு பலமாக பற்றிப் பிடிக்கப்பட்டதா? என்ற கேள்வி அநேகருக்குள்ளே எழுந்து கொண்டேதான் இருக்கிறது.

அஸ்ரபின் மரணத்தோடு சிதறுண்டு போன முஸ்லிம் சமூகம். ஆளுக்கொரு கட்சி அமைத்து, விரும்பியவர்கள் தலைமைகளாக சிம்மாசணம் ஏறி, அஸ்ரபின் பெயரினால் பாராளுமன்றம் சென்று, தங்களை முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களாகவும், பாதுகாலர்களாகவும் காட்டிக்கொண்டிருப்பது லேதனையே.

முஸ்லிம் சமூகம் அடைய வேண்டிய இலக்குகளும் நகர்வுகளும் எங்கோ இருக்க, அவரின் மரணத்தோடு எழுச்சி அடைந்த சில அரசியல் தலைவர்கள், முஸ்லிம் சமூகத்திற்காக செய்த சாதனைகளும், எதிர்கால திட்டமிடல்களும் என்னவென்ற கேள்வி எழுகிறது.

அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து கொண்டு, தலைவரின் நினைவில் ஆளுக்கொரு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, அவரது விசுவாசிகளாக அடையாளம் காட்ட நினைப்பதன் மர்மம்தான் என்ன?

தேர்தல் காலங்களில் அதிகப்படியாக முஸ்லிம் சமூக தலைவர்களினால் உச்சரிக்கப்படுகின்றதொரு பெயராக, மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபின் பெயரே சுழன்றடிப்பதோடு,. அனேகமான அரசியல்வாதிகளுக்கு லேபலாகவும் மாறி நிற்கின்றது. அஸ்ரபை காட்டாவிட்டால் தேற்றுவிடுமோ என்ற பயம் அனேகருக்குள்ளே இருந்துகொண்டேதான் இருக்கிறது.

அஸ்ரபின் பரந்துபட்ட சிந்தனை, அவரது தலைத்துவப் பண்புகள், கட்சிப் போராளிகளை தன் கட்டுக்கோப்புக்குள்ளே வைத்திருந்த பாங்கு, யாவரையும் அடக்கி ஆளும் திறன், ஒன்றை நினைத்தால் அதை சாதிக்கும் திறமை, சமூகத்தின் மீதான நீண்ட பார்வையென விரிந்தும், பரந்தும் காணப்பட்ட அவரது ஆளுமைப் பண்புகளை யாவரும் அறிவர்.

இத்தனை பண்புகளையும் ஒரே கோட்டில்கொண்ட, சமூகத்தை பிளவுபடுத்தாத, ஆளுக்கொரு நிகழ்ச்சி நிரலில் இயங்காத, சமூகத்தைப் பற்றி சதாவும் சிந்திக்கின்ற, நல்ல தலைவர்கள் எப்போதுதான் முஸ்லிம் சமூகத்திலிரருந்து எழப்போகின்றார்கள் என்ற கேள்வி கல்விச் சமூகத்துக்குள் அன்றிலிருந்து இன்றுவரை எழுந்துகொண்டேதான் இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்திற்குள்ளே தொற்றிய இந்த பெரும் வியாதி அனைத்து சமூகங்களுக்குள்ளும் ஊடுவி, ஆளுக்கொரு கட்சியென்ற நிலை உருவாகிப்போயுள்ளது. இரா சம்பந்தன் ஐயாவின் மரணத்தின் பின், இலங்கை தமிழரசுக் கட்சிக்குள்ளே நல்ல தலைமையை அடையாளப்படுத்துவதில் பல சிக்கல்களும், குழறுபடிகளும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகாண முடியாத சமாச்சாரமாகவே இருந்து வருகிறது.

ஏன் பள்ளிவாயல்கள், கோயில்கள், பன்சாலைகளில் கூட தலைவர்களை நியமிப்பதில் எத்தனை இழுபறிகள், காட்டிக் கொடுப்புக்கள், விஷமத்தனங்கள் என பலதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

நூறு வீதம் மக்கள் நலன் சார்ந்து உச்சமுடன் நிர்வாகம் செய்யக்கூடிய, பொது நிதிகளை உண்மைத் தன்மையோடு செலவழிக்க கூடிய, சரியான முறையில் கணக்குகளை காட்டக்கூடிய, கமிஷன்களை பெறாமல் சரியாக பொதுப்பணிகளை செய்யக்கூடிய, தலைமைத்துவத்துக்கு ஆசைப்படாத நல்ல அரசியல்வாதிகள், தலைவர்கள், நிர்வாகிகள் எப்போதுதான் அனைத்து சமூகத்திலிருந்தும் எழப்போகின்றார்களோ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தோண்றியே மறைகிறது.

அதுபோல நட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்கள், நாடாளுமன்றில் இருக்கின்ற அரசியல்வாதிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்கள் நியாயமாக வும், நேர்மையாகவும் செயற்படுகின்றபோது வட்டாரம், பிதேசம், மாவட்டம், மாகாணம், தேசியம் எல்லாமே உச்சமாக உயரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆக தற்போது இருக்கின்ற தலைமைகள் சமூகத்தின் கனவுகளை சதாவும் சுமக்கின்ற நல்ல தலைவர்களை அல்லது புது தலைமுறையை காலம் கடந்தேனும் கண்டுபிடிக்குமா? இல்லை கட்சி தலைவர்களின் மரணத்தோடு போட்டி போட்டு தலைமைக் கதிரையில் ஏறி உட்கார இருப்பவர்கள் நினைப்பார்களா? இல்லை இன்னுமின்னும் புதியபுதிய கட்சிகள்தான் உருவாகுமா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் பழைமையை கடந்து அனைத்து சமூகமும் புதிய தலைமைகளை அடையாளப்படுத்தி வைப்பது காலத்தின் கட்டாய கடனும், கடமையுமாகும்.

-எம்.ரி.எம்- (21092025)

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700243

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time