போதைப்பொருள் விற்பனையில் சிக்கிய மனைவி – கணவன் தப்பியோட்டம்.!!!
கம்பஹா, கணேமுல்ல கெந்தலியத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மனைவி கைதுசெய்யப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான கணவன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, வீட்டிலிருந்து 1 கிலோ 270 கிராம் ஐஸ், 410 கிராம் ஹெரோயின், ரூ. 5 இலட்சத்து 9 ஆயிரம் பணம், 6 கையடக்கத் தொலைபேசிகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், பொலிஸ் சீருடைகள், 36 தேசிய அடையாள அட்டைகள், இலத்திரனியல் தராசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.