உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

போதை மாத்திரைகளை கடத்தி வந்த இளைஞர் ஒருவர்; பொலிசாரினால் கைது.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த நிலையில் இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தெரிவித்தார்.

நேற்று மாலை வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் போது 29 வயதுடைய மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 84 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் பொலிசாரினால் விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700020

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time