உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

28,500 மில்லி லீற்றர் கசிப்புடன் இளைஞர் கைது: பொலிஸார் மேலதிக விசாரணை.!!!

(பாறுக் ஷிஹான்)

28500 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான  சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  வீரமுனை  பகுதியில்  கசிப்புடன் 26 வயதுடைய சந்தேக நபரை இன்று (07) சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்  சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  28500 மில்லி லீற்றர் கசிப்புடன் குறித்த சந்தேக நபரை  கைது செய்திருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட கசிப்பு உள்ளிட்ட   சான்றுப்பொருட்கள் சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்க எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700969

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time