சைஃப் சாம்பியன்ஸ் ட்ரோபி 2026: ஹுசைனியா விளையாட்டுக்கழகம் சம்பியன்.!!!
• 16 அணிகள் பங்கேற்ற மென்பந்து கிரிக்கெட் தொடரில் பிலிட்ஸ் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடம்.
– எம்.ரி.எம்.யூனுஸ் –
சைஃப் ஃபவுண்டேஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற சைஃப் சாம்பியன்ஸ் ட்ரோபி 2026 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹுசைனியா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.
விக்டரி மைதானத்தில் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 11 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் தலா 8 ஓவர்கள் கொண்ட பகல் நேரப் போட்டிகளாக தொடர் இடம்பெற்றது.
தொடரின் இறுதிப்போட்டியில் ஹுசைனியா விளையாட்டுக்கழகமும் பிலிட்ஸ் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக விளையாடிய ஹுசைனியா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன்படி, சம்பியன் அணிக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தைப் பெற்ற BLITZ SPORTS CLUB அணிக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
அத்துடன், தொடரின் சிறந்த வீரராக BLITZ அணியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாம் இடத்தினை Jolly boys விளையாட்டுக்கழகமும் நான்கான் இடத்தினை றப்பானியா விளையாட்டுக்கழகமும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சைஃப் ஃபவுண்டேஷன் பணிப்பாளர் எஸ்.எம். சப்றி தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்வில், அனுசரணையாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த வாய்ப்பாக அமைந்ததுடன், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


















































































































