உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 50 இலட்சம் வாகனங்களைக் கையாண்டு வரலாற்று மைல்கல்லை எட்டியது.!!!

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை எட்டியுள்ளதாக துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 579,362 வாகனங்களைக் கையாண்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், 2025ஆம் ஆண்டில் 726,153 வாகனங்களைக் கையாண்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாத்திரம் 104,620 வாகனங்கள் கையாளப்பட்டுள்ளதுடன், ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச வாகனக் கையாளுகை என்ற சாதனையையும் துறைமுகம் நிலைநாட்டியுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் கீழ் துறைமுகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, வருடாந்தம் சுமார் ஒரு இலட்சம் வாகனங்கள் மாத்திரமே கையாளப்பட்டன.

ஆரம்பகால வாகனக் கையாளுகையுடன் ஒப்பிடுகையில் தற்போது பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், மொத்த வாகனக் கையாளுகையில் 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1374174

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time