மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் பஸ் கவிழ்ந்து விபத்து; 22 பேர் காயம்.!!!
மஹியங்கனை – கண்டி பிரதான வீதியின் ஹசலக, பாலம் சந்திக்கு அருகில் இன்று (29) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


