சுனாமி தாக்கத்தின் 21வது ஆண்டு நினைவு தினம்; மட்டக்களப்பில் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு – இம்மாவட்டத்தில் 2800 பேர் பலி.!!!
(ஜே.கே)
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 21 வது ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
டச்பார் நாவலடி போன்ற கரையோரப் பிரதேசங்களிலுள்ள சுனாமி நினைத் தூபிகளில் கண்ணீர்மல்க கதறியழுது உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
டச்பார் பங்குத் தந்தை அருட்தந்தை அடிகளார் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபியில் இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு கண்ணீர் மல்க உறவினர்களின் ஆல் மலரஞ்சலி செலுத்தப்பட்டது டன் மதத்தலைவர்களினால் சமய பிரார்த்தனைகளும் இடம்பெற்றன
சுனாமி தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2800 பேர் பலியானதுடன் 600பேர் காணாமல் போயிருந்த மை குறிப்பிடத்தக்கது.






