உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 14, 2025

Hot News

அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில்; பங்கேற்கப் போவதில்லை – ஈரான்.!!!

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லையென்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான நீண்டகால மோதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இயல் சமீர் தனது நாடு ஒரு நீண்ட மோதலுக்கு தயாராக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். இது எதிர்காலத்தில் கடினமான காலங்களுக்கு வழிவகுக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஜெனீவாவில் ஐரோப்பிய இராஜதந்திரிகளையும் சந்தித்துள்ளார்.

இதன்போது, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்திய பின்னரே ஈரான் இராஜதந்திர நடவடிக்கைகளை பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடைய அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும், இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

Total Websites Views

Total Views: 314706

Search

விளம்பரங்கள்