உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

டொராண்டோ நகர மன்றத்தின் சபாநாயகராக ஆஸ்மா மாலிக் தெரிவு; ஹிஜாப் அணிந்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனை.!!!

கனடாவின் டொராண்டோ நகர மன்றத்தின் சபாநாயகராக கவுன்சிலர் ஆஸ்மா மாலிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், டொராண்டோ நகர மன்றத்தின் உயர்மட்டத் தலைமைப் பதவியை வகிக்கும் முதல் ஹிஜாப் அணியும் பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2026 நவம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 2026–2030 காலப்பகுதிக்கான நகர மன்றத்தின் முதலாவது கூட்டத்தின்போது இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

ஸ்படினா–ஃபோர்ட் யார்க் (Spadina–Fort York) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆஸ்மா மாலிக், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு நகர மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், விவாதங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நகரத்தின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பொறுப்புகளை முன்னெடுக்கவுள்ளார்.

மேலும், டொராண்டோ நகர மன்றத்தின் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் ஹிஜாப் அணியும் பெண் மட்டுமன்றி, நிறவெறிக்குட்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

2022ஆம் ஆண்டு டொராண்டோ நகர மன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், அந்நகர மன்றத்திற்குத் தெரிவான முதல் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றையும் ஆஸ்மா மாலிக் ஏற்கனவே படைத்திருந்தார்.

முன்னதாக 16 ஆண்டுகள் சபாநாயகராகப் பதவி வகித்த ஃபிரான்சஸ் நுன்சியாடாவின் (Frances Nunziata) பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்மா மாலிக் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். அக்டோபர் 2026 நகராட்சித் தேர்தலில் ஃபிரான்சஸ் நுன்சியாடா தோல்வியடைந்திருந்ததுடன், சபாநாயகர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளராகவும் ஆஸ்மா மாலிக் விளங்கினார்.

இதேவேளை, டான் வேலி நார்த் (Don Valley North) தொகுதி கவுன்சிலர் ஷெல்லி கரோல் (Shelley Carroll) நகர மன்றத்தின் துணை சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361577

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time