உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

ஏடனை நெருங்கும் ஹூதி படைகள்; பாதுகாப்புக்காக துருப்புகளை நகர்த்தும் சவூதி ஆதரவு இராணுவம்.!!!

யேமனில் நிலவி வரும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தலைமையிடமான ஏடன் நகரை நோக்கி ஹூதி கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏடன் நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லஹ்ஜ் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள ஹூதி படைகள், தற்போது ஏடன் நகரிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹூதிகளுக்கு எதிராகப் போராடி வரும் சவூதி அரேபியா ஆதரவு அரசாங்கப் படைகள், செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்-மண்திப் ஜலசந்தி பகுதிகளில் அமைந்துள்ள தமது முன்னணிப் பகுதிகளிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெற்று, ஏடன் நகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஹூதிகளுக்கு எதிராகச் செயற்படும் கூட்டணியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்தக் குழுக்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் இராணுவ ஒற்றுமையின்மை, ஹூதி படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹூதி படைகள் ஏடன் நகரைக் கைப்பற்றுமா என்பது தொடர்பில் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

சில ஆய்வாளர்கள், ஹூதிகள் ஏடன் நகரைக் கைப்பற்றுவதுடன், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஏனைய பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் செயற்படுவதாகக் கருதுகின்றனர்.

மறுபுறம், சவூதி அரேபியா ஏடன் நகரை இராணுவத் தளமாகப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே ஹூதிகள் அந்நகருக்குள் நுழையக்கூடும் என்றும், இல்லையெனில் நேரடியாக நகரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யேமனில் அதிகரித்து வரும் இந்த இராணுவ நகர்வுகள், அந்நாட்டின் அரசியல் எதிர்காலம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமைகளில் மேலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361568

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time