ஈரான் மீது தாக்குதல்: உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் உயிரிழப்பு – IRNA உறுதிப்படுத்தல்.!!!
சனிக்கிழமை (28) இடம்பெற்ற அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதல்களில், ஈரானிய ராணுவத்தின் பல உயர்மட்டத் தளபதிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Islamic Republic News Agency (IRNA) உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவலை CNN மற்றும் Al Jazeera ஆகிய சர்வதேச ஊடகங்களும் மேற்கோள் காட்டியுள்ளன.
உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட முக்கிய தலைவர்கள்:
அப்துல் ரஹீம் மௌசவி – ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி
அஜீஸ் நசீர்சாதே – பாதுகாப்பு அமைச்சர்
முகமது பக்பூர் – இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தரைப்படைத் தளபதி
அலி ஷாம்கானி – அதியுயர் தலைவரின் பாதுகாப்பு ஆலோசகர்
இந்தத் தாக்குதல், Ayatollah Ali Khamenei தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனியும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் மற்றொரு செய்தி நிறுவனம் Tasnim News Agency கூட இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல தளபதிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.