உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

பங்களாதேஷ் முன்னாள் பிரதமா்; ஷேக் ஹஸீனாவுக்கு எதிராக பிடியாணை.!!!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரான அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டிலுள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் நேற்று முன்தினம் (01) பிடியாணை பிறப்பித்துள்ளது.

இருவரையும் ஜூன் 16 க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் என்று 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் பங்களாதேஷின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இதனை மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று தெரிவித்து, பங்களாதேஷின் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன.

அவருடைய அரசுக்கு எதிராகப் போராடியவா்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை ஷேக் ஹசீனா சூழ்ச்சியுடன் திட்டமிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கியதாக தீா்ப்பாயத்தில் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோன்று முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து, ஷேக் ஹசீனா மற்றும் அசதுஸ்ஸமான் கானுக்கு எதிராக தீா்ப்பாயத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு இருவரையும் 2025 ஜூன் 16 க்குள் ஆஜா்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவை பங்களாதேஷிற்கு நாடு கடத்துமாறு அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 322870

Search

விளம்பரங்கள்