உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட போட்டி நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கல்வி உயர் கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட குழுவின் வேண்டுகோளுக்கு அமைய புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பாடசாலையின் உப அதிபர் எம் எம் நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

“செயல்களை முன்னெடுப்போம்-பொறுப்புடன் செயற்படுவோம்”, “சூழல் நேய பாடசாலைகளிலிருந்து எதிர்கால பசுமைத் தலைவர்கள்”, “பல்வகைமையை மதிக்கின்ற மகிழ்ச்சிக்குரிய வகுப்பறை”, “செயல்களில் நியாயத்தன்மை மற்றும் ஒவ்வொரு தீர்மானத்திலும் வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்” ஆகிய தலைப்புக்களில் புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது .அத்தோடு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பாடசாலையின் பழைய மாணவர்களான 1994 ம் ஆண்டு மாணவர்களினால் பெறுமதியான சான்றிதழ்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி சான்றிதழ் புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் டப்யூ.எம் . ஜஸீலினால் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது 2025.05.30 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்ட போது இதன்போது உப அதிபர் எம்.எம்.நியாஸ், பிரதி அதிபர் எச்.நஸ்ருதீன், பகுதித் தலைவர்களான பாரூக் பதீன், எம்.எம்.றிபாஸ் ஆசிரியர்களான.எம்.எஸ்.எஸ்.மெளபியா,எஸ்.எம்.பீ.முஹிபுர் நிஸா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700465

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time