உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பின் சகல பிரதேசங்களிலும் டெங்கு – மக்கள் அவதானம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன்காரணமாக மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலுமிருந்து 71 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு தாக்கம் காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம்; 2025 டிசம்பர் 21ஆந் திகதி வரையும் 71 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாரம் வரை டெங்கு தாக்கத்தினால் அதிகளவு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர் பாதிப்புக்குள்ளானதுடன் செங்கலடி பிரதேசத்தில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 6 பேரும், வவுனதீவு பிரதேசத்தில் 5 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி; பிரிவுகளில் தலா 4 பேரும் ஓட்டமாவடி, பட்டிப்பளை, வாகரை மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் தலா 3 பெரும் வெல்லாவெளி பிரதேசத்தில் இருவரும், ஏறாவூர் மற்றும் வழைச்சேனைப் பிரதேசங்களில் தலா ஒருவருமாக மொத்தம் 72 பேர் டெங்கு நோயாளர்களான அடையாங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தவபாலசூப்பிரமணியம் சரவணன்; மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். கடந்த மாதம்; 85 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுமுள்ள மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700017

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time