உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவால் எழுதப்பட்ட மூன்று நூல்கள் வெளியீட்டு விழா.!!!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சமுத்திர புத்தக வெளியீட்டாளர்கள் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களால் எழுதப்பட்ட ஏரியின் மத்தியில் போர் மற்றும் விஞ்ஞானத்தினதும் மனித மூளையினதும் மர்மங்கள் மற்றும் விஞ்ஞானத்தினதும் மனித மூளையினதும் மர்மங்கள் ( தமிழ் மொழிபெயர்ப்பு) ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (01) திருகோணமலையில் உள்ள உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குவைத் அரசின் முன்னாள் தூதுவர் பாலசுப்ரமணியம் காண்டீபன் (SLOS), கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் துறைத் தலைவர் கலாநிதி ஜி.ஏ.பி.கே.கணேகொட, விருது பெற்ற எழுத்தாளர் உபனந்த வெலிகல, மற்றும் மூத்த எழுத்தாளர் உமா வரதராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும், இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

Total Websites Views

Total Views: 312973

Search

விளம்பரங்கள்