உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் – வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்.!!!

(எம்.ஐ.அப்துல் நஸாா்)

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் மன்றக் காாியாலயத்தில் மன்றத்தின் தலைவா் பாவலா் சாந்தி முஹைதீன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

கடந்த வருட நவ இலக்கிய மன்றத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தின் கூட்டறிக்கையும் செயற்பாட்டறிக்கையும் மன்றத்தின் செயலாளா் ஓய்வுபெற்ற ஆசிாியா் கவிஞா் எம்.எம்.அமீா் அலி அவா்களால் வாசிக்கப்பட்டது.

அதனையடுத்து மன்றத்தின் பொருளாளா் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளா் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் அவா்களால் கடந்த வருட கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.

இறுதியாக, இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய இலக்கிய செயற்பாடுகள், மாதாந்த சந்தா அறவீட்டின் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் விாிவாக கலந்துரையாடப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தா் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் பலாஹி அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இப் பொதுச் சபைக் கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 928520

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time