உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

இலங்கையின் 78வது சுதந்திர தின நினைவாக: காத்தான்குடியில் விஷேட கவியரங்கம்.!!!

— எம்.ரி.எம்.யூனுஸ்—

காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட கவியரங்கம் காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (04) புதன்கிழமை நடைபெற்றது.

கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக பாவலர் சாந்தி முகைதீன் மற்றும் கவிமுரசு ஏ.எல்.எம். சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக் கவியரங்கத்தில் கவிஞர் உசனார் ஜாபீர், கவிஞர் முகைதீன் சாலி, கவிஞர் அபூ மின்ஹாஜ், கவிஞர் ஏ.எச்.எம். ஜிஹார், கவிஞர் எச்.எம். இக்பால் கான், கவிஞர் எம்.ஏ.சி. ரபாய்தீன், கவிஞர் இக்பால் மௌலவி, கவிஞர் ஏ.எல். சப்ரி, கவிஞர் கபீர் எம். ஹசன், கவிஞர் எம்.ரி.எம். யூனுஸ், கவிஞர் எம்.எம். ஷாஹிர் ஹூஸைன், கவிஞர் நூன் ரஹிம் ஆகிய 12 கவிஞர்கள் கவிதைகளைப் பாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். குட்டிக் கவிஞர் செல்வி மெரீன் தமீமும் கவிதை பாடினார்.

மேலும், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

இது காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 19வது கவியரங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் கலைஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிபத்தக்கது..

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 928520

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time