மின் கம்பியில் மின்சாரம் தாக்கி; மின்சார சபை ஊழியர் பரிதாப பலி.!!!
போவத்த வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியதில், மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அனுருத்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி கடுமையான காயமடைந்த அனுருத்த குமார, உடனடியாக வீரபொக்குன அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.
பின்னர், அவரை குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
41 வயதான அனுருத்த குமார, 2007 ஆம் ஆண்டு தம்புள்ளை ரயில் நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு முதல் ஹெட்டிபொல ரயில் நிலையத்தைச் சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.