எரிபொருள் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமுல்.!!!
இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லங்கா டீசல் ஒரு லிட்டருக்கு 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 195 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.