காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில்; இறந்த நிலையில் 18 அடி முதலை கரையொதுங்கியது.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள், பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று (27) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.
கடந்த பல மாதங்களில் இருநபர்களையும் கொன்று உணவகக்கியுள்ளதோடு. பல மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனை, குழிகளை இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த இராட்சத முதலையைப் பிடிக்க மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் ,காத்தான்குடி நகர சபை என்பன வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சிசெய்த போதிலும் முடியாமல்போன நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது
சுமார் 18 அடி நீளமுள்ள இம்முதலையினால் வாவியோரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.






