உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பில் காத்தான்குடியில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (22) கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, போட்டியில் பங்கேற்கும் அணிகள், போட்டி வர்ணனையாளர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் பெருந்திரளான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி, இளைஞர்களிடையே விளையாட்டுத்துறை ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361580

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time