உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிழக்கு மாகாண அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் குறித்து: ஆளுநர் தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்.!!!

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் தாக்கம் மற்றும் இயல்பு வாழ்க்கையை விரைவில் மீட்டெடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்னேற்றம்,எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (09) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் பேரிடரை எதிர்கொண்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், தொழில் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் முப்படைகள் மற்றும் காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700005

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time