உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு: பெண் ஒருவர் கைது.!!!

ஊவா மாகாணத்தின் குடாஓய பகுதியில் தனது வீட்டில் சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை குடாஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக குறித்த பெண் இந்த எரிபொருட்களை சேகரித்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 727674

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time