உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஆட்டோ சாரதி இக்பாலின் நேர்மைக்கு பாராட்டு: 14 இலட்சம் பெறுமதியான நகைகள், பணம் பொலிசாரிடம் ஒப்படைப்பு.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி முஸ்தபா இக்பால் என்பவரின் நேர்மையான செயலைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று ஓட்டமாவடி மேம்பாலத்தடியில் கிடந்த சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும், 19,420 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர் கண்டெடுத்துள்ளார். பின்னர் அவற்றை உடனடியாக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவான நடவடிக்கை எடுத்த பொலிஸார், குறித்த நகைகள் மற்றும் பணத்தை அதன் உரிய உரிமையாளரிடம் மீளக் கையளித்துள்ளனர்.

ஆட்டோ சாரதி முஸ்தபா இக்பாலின் நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811002

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time