உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மருதமுனையில் ‘உயிர்த்தெழும் சருகுகள்’ கவிதை நூல் வெளியீடு.!!!

-நூருல் ஹுதா உமர்-

மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட தமிழ்ப்பாட ஆசிரியை பாத்திமா ஸூபா தல்ஹா எழுதிய “உயிர்த்தெழும் சருகுகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று (28) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

Renge view சிறிலங்கா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல், கவிதாயினியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். ஏற்கனவே “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” எனும் நூலை வெளியிட்டுள்ளார்.

பொரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான எ. முஹம்மட் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வரவேற்புரையை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் நிகழ்த்தினார்.

முதன்மை விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பங்கேற்றார்.

நூலின் வெளியீட்டாளர் உரையினை டாக்டர் எஸ்.எம். தல்ஹாவும், நூல் தொடர்பான ஆய்வுரையை ஆசிரிய வளவாளரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். முஸா வழங்கினார். நிகழ்வை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல்.எம் ஷினாஸ் தொகுத்து வழங்கினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 928514

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time