அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.!!!
சந்தையில் பருப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் நெத்திலி உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலை உயர்வை காரணமாகக் காட்டி வியாபாரிகள் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் பல பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் பருப்பு சுமார் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு இதன் விலை சுமார் 270 ரூபாயாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் நெத்திலி 1,300 ரூபாவைத் தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக இதன் விலை சுமார் 1,100 ரூபாவாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் தற்போது 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.