உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின்; வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு அண்மையில் பாலர் பாடசாலை வளாகத்தில் அதிபர் எம் ஜே.என் பாஹீமா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக வடமேல் மாகாண முன் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்தி அதிகாரி ஜே.எச் ஆர்.பீ ஜயமகா, கற்பிட்டி பிரதேச செயலக முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி அதிகாரி எம். நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. ஆம் ர்.எம் முஸம்மில் மற்றும் கற்பிட்டி தில்லையடி ஜும்ஆ பள்ளியின் பேஷ் இமாம் எம்.டீ றிப்கான் (ரஹ்மானி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறார்களின் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் போன்ற இணை பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு வருடாந்தம் இடம்பெறும் சிறுவர் சந்தை நிகழ்வு இமாமுறையும் சிறப்பாக இடம்பெற்றதாகவும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களான ஏ.சீ யசினத் பானு, எம்.ஐ அகிலா பானு ஆகியோருடன் பயிலுனர்களாக கடமையாற்றும் ஜே.கே ஜெசீனா பானு மற்றும் எம்.ஆர்.எப் றஹ்னா ஆகியோருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் எம் ஜே.என் பாஹீமா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700495

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time