உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொணிப்பொருளில்; சிறுவர்களுக்கான ஒரு நாள் கிட்ஸ் கேம்.!!! 

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கல்விக்கு கரம் கொடுப்போம் எனனும் தொணிப்பொருளின் கீழ் சிறுவர்களுக்கான ஒரு நாள் கிட்ஸ் கேம் முகாம் வடமேல் மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மற்றும் தேடல் மீடியா நிறுவனம் இணைந்து நடாத்திய, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒரு நாள் கிட்ஸ் கேம் நிகழ்வானது வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், சியம்பலாகஸ் கொட்டுவ இன்டோர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தனிப் போட்டி, குழுப் போட்டி என பல் வேறுவிதமான போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.

மாணவர்களுக்கான பயிற்சிகள் இர்ஹாம் ஷரபி மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு தேடல் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஹம்தி மற்றும் தலைவி நுஹா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சியின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளருமான தேச கீர்த்தி ஏ.டபில்யூ.எம்.பஸ்லான் கெகனகொல்ல தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் எம். எஸ்.எம். சித்தீக், தற்பாதுகாப்பு கலை பயிற்றுவிப்பாளர் இம்ரான் வஹாப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் நோக்கம் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல், தலைமைத்துவத்தை கட்டியெழுப்புதல்,

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற பல்வேறு தொணிப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தபட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 150 க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது பிரதம அதிதிகளை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் தற்பாதுகாப்பு கலையின் சில பயிற்சிகள் தற்பாதுகாப்பு கலையை பயின்று வரும் மாணவர்களின் மூலம் அரங்கேற்றப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700433

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time