காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசல் விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் முக்கிய சந்திப்பு.!!!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) அவர்களை, அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் தலைவர் மெளலவி ஏ.ஜே. அப்துர் ரவூப் மிஸ்பாஹி பஹ்ஜி தலைமையிலான குழுவினர் நேற்று (21) புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் சூபி முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அச்செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சார்பில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.எம். ஜெசீம், அதன் செயலாளர் மெளலவி கே.ஆர்.எம். சஹ்லான் றப்பானி (B.B.A.) உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.


