உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 22, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு AICP நிறுவனத்தினால் நீர் வசதி ஏற்படுத்திக் கொடுப்பு.!!!

-எம்.எஸ்.எம். சஜி-

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அகில இலங்கை இஸ்லாமிய நற்பணிகள் சங்கம் (AICP) நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அகில இலங்கை இஸ்லாமிய நற்பணிகள் சங்கத்தின் (All Ceylon Association of Islamic Charitable Projects – AICP) சமூக நலச் சேவையின் ஓர் அங்கமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நீர் வசதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில், காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஸப்றாஸ் (பஹ்ஜி), வைத்தியசாலையின் பிரதம அதிகாரி வைத்தியர் I.A.L. தாரிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு, மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கிவரும் AICP நிறுவனத்தின் இந்நடவடிக்கை, சமூக நலச் சேவையில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் மற்றுமொரு முயற்சியாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1250412

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time