உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 22, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

மட்டக்களப்பு பாலமுனை கடற்பகுதியில் கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு: ரூ. 6.5 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (21) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, சுமார் ஆறரை இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சினால் முற்றாகத் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 165 மீற்றர் நீளமுடைய சுருக்கு வலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பின்னர், கைப்பற்றப்பட்ட வலைகள் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வலைகளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1251321

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time