உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

சூடானில் பாரிய நிலச்சரிவு: கிராமம் முழுவதும் அழிவு – ஒரே ஒருவரே உயிருடன் மீட்பு.!!!

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்குட்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

சூடான் விடுதலை இயக்கம்/ இராணுவம் (SLM/A) எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றுள்ளதோடு, பல நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக SLM/A, ஐ.நா மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளிடம் உடனடி உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி கோரியுள்ளது.

குறித்த கிராமம் தற்போது முழுதும் மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக SLM/A அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கிராமம் அமைந்துள்ள தார்ஃபூர் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சிவில் போர் காரணமாக பலர் பாதுகாப்பிற்காக இந்த மலைச்சரிவுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், இங்கு போதிய உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது.

இங்கு கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினால், மக்கள் பாதிக்கும் பசி, பட்டினி உள்ளிட்ட நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய அனர்த்தமானது, முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700290

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time