மலேசியாவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட 5 பேர் பலி.!!!
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் தொலைதூர கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மிரி நகரிலிருந்து லாங் லெலாங் கிராமப் பகுதிக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக குறித்த ஹெலிகாப்டர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்பட்ட விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் பயணித்த விமானி மற்றும் நான்கு மருத்துவத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


