உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மைக்கல் கொலின் எழுதிய“அன்பின் முத்தங்கள் கவிதை நூல் அறிமுக விழா.!!!

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மைக்கல் கொலினின் “அன்பின் முத்தங்கள்” கவிதை நூல் அறிமுக விழா இன்று (21) திருகோணமலை
ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கவிஞர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச்செயலாளர் க.மகேசன் முதன்மை விருந்தினராகவும், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கே.குணநாதன் சிறப்பு விருந்தினராகவும், கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் நா.மணிவண்ண் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், அழைப்பு விருந்தினராக ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருவும் ஆதீனகர்த்தாவுமான வேதாகமமாமணி சிவ ஸ்ரீ சோ. இரவிச்சந்திரகுருக்கள், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம்,
திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் சட்டத்தரணி திலகரத்தினம் துஷியந்தன், திருகோணமலை இலங்கை வங்கி முகாமையாளர் து.ரகுராம், மக்கள் வங்கி முகாமையாளர் அமீர்டீன் கே. முகம்மட், பொறியியலாளர் வே.சதீஸ்குமார், அன்பின் பாதை இயக்குனர் கவிஞர் லலிதகோபன் திருமதி ரொசில்டா அண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நூலின் பிரதிகளை பெறவுள்ளனர்.

நூல் நயவுரையை கவிஞர் சு. சிவசங்கரனும, நிகழ்ச்சித் தொகுப்பை செல்வி அபிநயா ரகுராம் ஆகியோரினால் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700737

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time