மியான்மரில் பாடசாலை மீது இராணுவம் விமானக் குண்டுவீச்சு; ஆசிரியர்கள், மாணவர்கள் உற்பட 22 பேர் பலி.!!!
மியான்மரின்(myanmar) சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை மீது நேற்று(12) காலை மியான்மார் இராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தப் பகுதி இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் நடைபெறவில்லை இலக்கு மாறி தாக்குதல் பாடசாலை மீது நடத்தப்பட்டுள்ளது.



