மியான்மர் – பௌத்த விகாரை மீது வான்வழித் தாக்குதல்; 4 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி.!!!
மியான்மரில் உள்ள ஒரு பௌத்த ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயிலிருந்து வடமேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாகாய்ங் நகரத்தின் லின் டா லூ கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல் நடந்த நேரத்தில், 150க்கும் மேற்பட்டோர் இந்த ஆலயத்தில் தங்கியிருந்ததாகவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் புதன்கிழமை (ஜூலை 10) அதிகாலை 1.00 மணியளவில் நடந்திருந்தாலும், இன்று (ஜூலை 12) தான் வெளிநாட்டு ஊடகங்களுக்கு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரின் தற்போதைய இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் முக்கிய கோட்டையாக சாகாய்ங் பகுதி கருதப்படுகிறது.