நல்லுறவின் நினைவாக; பஸ் தரிப்பிடம் திறந்து வைப்பு.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் அங்கத்தவர்களும் இணைந்து கற்பிட்டி பள்ளிவாசல்துறையில்
1990ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக வடமாகாணத்திலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இம் மக்களை கற்பிட்டி மக்கள் வரவேற்று அரவணைத்தனை நன்றி உணர்வோடு நினைவு கூறும் வண்ணம் கற்பிட்டி பள்ளிவாசல்துறையில் பஸ் தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு பஸ் தரிப்பிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் மத்திய அரசின் மகளிர் பொறுப்பதிகாரி காந்தி லதா , மாகாண மகளிர் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிவில் சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளீர் சங்கங்களின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
1990 ம் ஆண்டு வட புல மக்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு சம்பவமாக இருக்கக்கூடாது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளுக்கும் கதை கூறுவதற்கான வரலாற்று மூலாதாரமாகவும் அமைய வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த பஸ் தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது