உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஞானம் பாலச்சந்திரனின், ‘’பொய்மையும் வாய்மையிடத்து…’’’ விறுவிறு நாவல்.!!!

வட்டச் சக்கர சுட்டும் செய்தி

துட்டச் சத்ரு ரகளையில் எய்தி

திட்டம் தீர் வருடம் காண்

துட்டம்தீர் திரு கச்சாமி

பிரேளிகை வகைக் கவிதையான இதன் உட்பொருள் இலங்கை புலனாய்வு அதிகாரி ரோஹான் – சி ஐ டி பியசேன-பேராசிரியர் சிவராமன்- உதவியாளர் கஜந்தன்- மாணவி சுருதி ஆகியோரை ஒரு நேர்கோட்டில் இணைத்து நேபாளம் காத்மண்டு தொடக்கம் இலங்கை கண்டி வரை துரத்துகிறது…

இதன் உள்ளே பொதிந்துள்ள மர்மம் மெய் சிலிர்க்க வைக்கின்றது ‘’புகழ்பெற்ற’’ நாலாம் மாடிக்கு கொண்டு செல்கிறது.. சிங்கள மேல்மட்டத்தை சிந்திக்க வைக்கின்றது….புலனாய்வுத் துறையை அலைக்கழிக்க வைக்கின்றது …மர்மத்தின் மேல் மர்மமாக முடிச்சுப் போடுகிறது ..இலங்கையின் ரகசியத்தை மூடி வைத்திருக்கிறது…

நாவல் தொடங்கி முடியும் வரை விமானம்-புகையிரதம்-கார் என்று விரைகிறது…ஒரு ஆங்கில விறுவிறு திரைப்படம் போலவும்- சுஜாதாவின் அறிவியல் மர்ம புனைவு நாவல் போலவும் மெகா சுவாரஷ்யங்களை தன்னுள் பொத்திக் கொண்டு விரைகிறது…

ஞானம் பாலச்சந்திரனின் எழுத்து நடை அவ்வளவு விரைவாக நாவலை நகர்த்திக் கொண்டு செல்கிறது. அதிலும் ஒரு புதுமையாக இந்நூலாசிரியரின் ‘’மணிவாசக அணியமுதம்’’ நூலில் வரும் சிவராமனே இதில் பேராசிரியராக அவதாரமெடுத்து கதையை நகர்த்துகிறது…..

இறுதியில் இந்த பிரேளிகைக் கவிதை அவிழ்க்கும் முடிச்சு மகா ரகசியமானது,,,எழுதிய புலவனை 1156ஆம் ஆண்டில் மரண தண்டனைக்குள்ளாக்கி விடுகின்றது….இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆள வைக்கின்றது…பராக்கிரமபாகுவுக்கு ஆட்சி தருகிறது…

இலங்கையில் முத்துக்குமார கவிராயர்-சேனாதிராய முதலியார்-க.மயில்வாகனப் புலவர்-இ.நமசிவாயம்பிள்ளை-சுந்த முருகேசனார் போன்ற ஒரு சில வித்துவான்களாலேயே இந்த வகை பிறேளிக் கவிதைகளை யாக்க முடியும்.. எனவும் மேலும் சில குறிப்புகளும் தொல்பொருள் ஆய்வுகளும் நாவலுக்குள் ஊடுபாவு குறிப்புகளாக காணக் கிடைக்கின்றது….

இப்படியும் ஒரு புதினம் எழுதலாம் என்று நிருபித்திருக்கும் நாவலாசிரியரை எவ்விதம் பாராட்டுவது…?

தீரன்

 

.

Related News

Total Websites Views

Total Views: 115837

Search

விளம்பரங்கள்